கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் உதயநிதி

Update: 2022-03-31 11:45 GMT

உலகநாயகன் கமலஹாசனுடன் இணையவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.





ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில், அனிருத் இசையில் தயாராகியுள்ள படம் விக்ரம் வரும் ஜூன் 3'ம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் தகவல்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.




இந்நிலையில் தற்போது படத்தை எம்.எல்.ஏ'வும், முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் ஜெயன்ட் மூவிஸ்' நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தை முழுவதுமாக வெளியிட இருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான்.

Tags:    

Similar News