முடிவடைந்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு - ரிலீஸ் எப்போது?

Update: 2022-04-01 07:15 GMT

விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.




 


இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் 'காத்துவாக்குல 2 காதல்'. அனிருத் இசையமைத்து, ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், பிரபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.




சமீபகாலமாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டி கொண்டாடினர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏப்ரல் 28'ஆம் தேதி திரையரங்குகளில் காத்துவாக்குல 2 காதல் வெளியாகவிருக்கிறது.

Similar News