'ஜன கன மன' இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் - உறுதியளித்த ப்ரித்விராஜ்

Update: 2022-04-02 15:30 GMT

நடிகர் ப்ரித்விராஜ் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் 'ஜன கன மன' படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என உறுதி அளித்துள்ளார்.




இயக்குனர், நடிகர் என இரண்டு தளங்களிலும் மாறி மாறி பயணிக்கும் நடிகர் ப்ரித்விராஜ் தற்போது 'ஜன கன மன' என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.




தற்பொழுது இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வரும் அவர் ஒரு நிகழ்ச்சியில் 'ஜன கன மன' படத்தைப் பற்றிக் கூறும்போது இந்த படத்திற்கு நிச்சயமாக இரண்டாம் பாகம் உண்டு என கூறினார். ஒரு படம் வெளியாகும் முன்னரே அதற்கு இரண்டாம் பாகம் உண்டு எனக் கூறியது மலையாள திரையுலக ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Tags:    

Similar News