சர்வதேச திரைப்பட விழாவில் பின்னணி இசைக்கான விருது வென்ற இசைஞானி

Update: 2022-04-02 15:30 GMT

சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜா இசையமைத்த ஆங்கிலப்படம் விருது பெற்றுள்ளது.




இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா 'எ ப்யூட்டிஃபுல் பிரேக்கப்' என்ற ஆங்கில படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான எஸ் நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள இப்படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.




நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது, அந்த விழாவில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு இந்த படத்திற்கான விருது கிடைத்தது.

Tags:    

Similar News