கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் மகனுடன் ஏ.ஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படம்
64-வது கிராமி விருது வழங்கும் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்..ரகுமான் அவரது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது. 1959'ஆம் ஆண்டு முதல் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம் அரங்கில் அறுபத்தி நான்காவது கிராமி விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தனது மகனுடன் கலந்து கொண்டுள்ளார். தன் மகன் ஏ.ஆர்.ஆர்.அமீனுடன் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியின்போது எடுத்துள்ள புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இந்த படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.