கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலரை பாராட்டியுள்ளார்.
வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தென்னிந்தியாவின் இருபெரும் படங்கள் வெளியாக உள்ளன. ஒன்று 'கே.ஜி.எப் 2' மற்றொன்று 'பீஸ்ட்'. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள 'கே.ஜி.எப் 2' படமும் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படமும் ஒரே நாளில் வெளியாவதால் இந்த இரு படங்களுக்கு அதிக போட்டி என தகவல்கள் வெளியாகின. கே.ஜி.எஃப் பிரமோஷனில் 'இப்போது இரண்டு படங்களையும் ரசித்துப் பாருங்கள்' என கே.ஜி.எப் நாயகன் யஷ் மிகவும் சாதாரணமாக கூறினார்.
ஆனாலும் அதிக பொருள் செலவில் தயாரான இருபெரும் படங்களின் வெளியீடு மற்றொரு படத்தை பாதிக்கும் என ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவி வந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் டிரைலரை பார்த்து கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நில் பாராட்டியுள்ளார், "இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது ட்ரெய்லரு பிரமாதமாக உள்ளது" என 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன், படத்தின் நாயகன் 'விஜய்' ஆகியோரையும் இணைத்து பதிவிட்டிருந்தார் இதற்கு 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன் நன்றி தெரிவித்தார்.