இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப்போகும் இரண்டு ஹீரோக்கள். நடிகர் விஜய்'க்கு துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸ் விஜய்யின் 65வது படத்தையும் இயக்குவதாக இருந்தது. ஆனால் வேறு சில காரணங்கள் காரணமாக அது இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு கைமாறியது. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படியாக தமிழ் சினிமாவின் பெரிய கதாநாயகர்கள் இருவருக்கு கதை செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விக்ரம், விஜய் சேதுபதி ஆகிய இருவருக்குமான கதையை ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்து வைத்திருப்பதாகவும் இருவரில் ஒருவர் விரைவில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு தெரிவிக்கிறது.