தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பரபர இயக்குனராக தொடர்ச்சியான வெற்றி படங்கள் கொடுத்து வரும் இயக்குனர் ஹரி தற்போது புதிதாக தெலுங்கு படத்தையும் இயக்க உள்ளார்.
பிரசாந்த் நடிப்பில் 'தமிழ்' படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ஹரி தொடர்ச்சியாக நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். குறிப்பாக ஆறு, சாமி, சிங்கம் 1, சிங்கம் 2, தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனை தொடர்ந்து தற்போது அருண் விஜய்யை வைத்து 'யானை' படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் ஹரி அடுத்தபடியாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருண்விஜய் பிரியா, பவானி சங்கர் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் முடித்தவுடன் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் புதிய படம் இயக்குனர் ஹரி இயக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹரி இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.