போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை கருத்தரங்கை துவக்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசும்பொழுது, "திரைப்படங்களில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு திரைப்படங்களில் அதிகம் இடம்பெற வேண்டும்" என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில், "முதல்வரின் கோரிக்கையை ஏற்பது எங்கள் கடமை முதல்வரின் வேண்டுகோளை ஏற்று வருங்காலங்களில் குட்காவுக்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கவும் முன்னணி நடிகர்களை வைத்து குட்கா போன்ற போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்" என குறிப்பிட்டார்.