நாளை வெளியாகிறது 'பீஸ்ட்' - டிக்கெட் கிடைக்காமல் திணறும் 'தளபதி' விஜய் ரசிகர்கள்

Update: 2022-04-12 05:45 GMT

விஜய்'ன் 'பீஸ்ட்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாவதை முன்னிட்டு தமிழக திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் திண்டாடி வருகிறார்கள்.


 



இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் நாளை வெளிவரவிருக்கும் படம் 'பீஸ்ட்'. விஜய் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு வரவிருக்கும் 'பீஸ்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை காலை முதல் வெளியாகிறது. தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் 'பீஸ்ட்' படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக ரசிகர்கள் இணையத்திலும், நேரிலும் சென்று முட்டி மோதுவதால் நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்காமல் வருகிறது வருகிறது.


 



நாளை தமிழில் 'பீஸ்ட்' படத்தை தவிர வேறு படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் 'பீஸ்ட்' படம் மட்டுமே வெளியாகிறது, ஆனாலும் நிறைய திரையரங்குகளில் டிக்கெட் கிடைக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் 'கே.ஜி.எப் 2' தமிழகத்தின் பல இடங்களில் வெளியாவதால் இரு படங்களுக்கும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் 'பீஸ்ட்' வெளியிடப்படும் திரையரங்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என தெரிகிறது.

Tags:    

Similar News