"இது உன்னுடைய படம்" - கமல் அளித்த ஊக்கம் பற்றி கூறும் லோகேஷ் கனகராஜ்

Update: 2022-04-12 06:30 GMT

நடிகர் கமல்ஹாசன் தனக்கு அதிகம் சுதந்திரம் கொடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெருமையாக கூறியுள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'விக்ரம்', அதிரடியாக தயாராகி உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன, வரும் ஜூன் 3'ம் தேதி திரைக்கு வர உள்ளது 'விக்ரம்' திரைப்படம்.




இந்நிலையில் சென்னையில் நடந்த சி.ஐ.ஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படம் தொடர்பாக கூறும் பொழுது, "விக்ரம்' படத்தில் எந்த இடத்திலும் கமல் தலையிடவில்லை, நான் கூட யோசனை கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால் அதற்கும் அவர் இடமளிக்கவில்லை. 'இது உன்னோட படம் என்ன வேணாலும் செய்யலாம்' என முழு சுதந்திரம் அளித்தார்" என்றார் பெருமையாக.

Tags:    

Similar News