இயக்குனர் அவதாரம் எடுக்கும் 'ஆஸ்கர் நாயகன்' ரசூல் பூக்குட்டி

Update: 2022-04-14 07:00 GMT

ஆஸ்கர் விருது வாங்கிய சவுண்ட் என்ஜினியர் ரசூல் பூக்குட்டி தற்பொழுது தனியாக படமொன்றை இயக்கவிருக்கிறார்.






இந்திய திரையுலக கனவான ஆஸ்கர் விருதை 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் பொழுது அவருடன் விருது வாங்கிய இன்னொரு நபர் 'சவுண்ட் டிசைனர்' ரசூல் பூக்குட்டி இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தமிழில் 'எந்திரன்' போன்ற படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றியுள்ளார்.




 

இந்நிலையில் தற்போது மலையாளத்தில் இவர் 'ஒத்த' என புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி கதாநாயகனாக நடிக்கிறார், ரசூல் குட்டி தனது நிறுவனத்திற்காக சொந்தமாகவே இந்த படத்தை தயாரிக்கிறார் இதுகுறித்த அறிவிப்பை போஸ்டருடன் ரசூல் பூக்குட்டி வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News