தனி விமானத்தில் ஆலியா பட் திருமணத்திற்குச் செல்லும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு
நாளை நடைபெறவிருக்கும் ஆலியாபட் திருமணத்திற்காக ஆர்.ஆர்.ஆர் படக்குழு தனி விமானத்தில் மும்பை செல்லவிருக்கிறது.
நாளை பாலிவுட்டில் நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆலியா பட் சமீபத்தில் நடித்த ஆர்.ஆர்.ஆர் படக்குழுவின் இயக்குனர் ராஜமௌலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் மும்பை விரைகின்றனர். அங்கு இரண்டு தினங்கள் திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர்.
முதன்முறையாக தென்னிந்தியத் திரையுலகில் ஆர்.ஆர்.ஆர் படம் மூலம் ஆலியாபட் கால் பதித்தது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரை உலகில் ஆலியாபட் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.