நிவின் பாலியை வைத்து இயக்குனர் ராம் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு நிறைந்துள்ளது.
மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலி'யை வைத்து பிரபல இயக்குனர் ராம் ஒரு படம் இயக்கி வந்தார். நடிகை அஞ்சலி, சூரி ஆகியோர் நடிக்க ராம் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் அந்தப்படம் தனுஷ்கோடி, கேரளா, சென்னை உள்ளிட்ட படங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன, படத்தின் பெயர், வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்.