சூப்பர் ஸ்டாரின் பாராட்டு குறித்து நெகிழும் 'டாணாக்காரன்' விக்ரம் பிரபு
'டாணாக்காரன்' படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'டாணாக்காரன்' படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார்.
இயக்குனர் தமிழ் இயக்கத்தில் சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான படம் 'டாணாக்காரன்'. காவலர் பயிற்சி மையத்தில் நடக்கும் சம்பவங்களையும், அங்கு நடக்கும் சங்கதிகளையும் வைத்து பின்னப்பட்ட திரைக்கதையை அருமையாக கையாண்ட விதத்தில் ரசிகர்களை இந்தப் 'டாணாக்காரன்' படம் கவர்ந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல நடிகர்களான லால், எம்.எஸ்.பாஸ்கர், மதுசூதன ராவ், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த இந்த 'டாணாக்காரன்' திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் கவர்ந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு ரஜினி 'டாணாக்காரன்' படத்தின் நாயகன் விக்ரம் பிரபுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து விக்ரம் பிரபு கூறுகையில், "சூப்பர் ஸ்டார் போனில் அழைத்து 'டாணாக்காரன்' படத்தில் எனது நடிப்பை பாராட்டி பேசினார். அந்த உணர்வை எப்படி விவரிப்பது என சொல்ல தெரியவில்லை நான் கனவில் கூட நினைக்காதது சாதனை இது" என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.