'டெல்லி பைல்ஸ்' - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குனர் அக்னிஹோத்ரியின் அடுத்த படைப்பு

Update: 2022-04-16 06:45 GMT

'தி காஷ்மீர் பைல்ஸ்' படக்குழு அடுத்தபடியாக 'டெல்லி பைல்ஸ்' என்ற படத்தை அறிவித்துள்ளது.




காஷ்மீரில் இந்து பண்டிட்டுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மையமாக வைத்து சமீபத்தில் திரையில் வெளியாகி பெரும் வரவேற்பை இந்தியா முழுவதும் பெற்ற படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்', இயக்குனர் விவேக் அக்னிஹோத்திரி இயக்கிய இப்படத்தில் முக்கிய வேடத்தில் அனுபம் கேர் நடித்திருந்தார். இப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை புரிந்தது, இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் குழு மீண்டும் அடுத்த படத்தில் இணைவதாக அறிவித்தது.




 


இந்த நிலையில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளதாகவும் அது பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, "நான்கு ஆண்டுகளாக நேர்மையுடன் கடுமையாக உழைத்து 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்தை உருவாக்கினோம், இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி புதிய படத்தை உருவாக்கும் நேரம் இது. 'டெல்லி பைல்ஸ்'" என தெரிவித்துள்ளார். அவர் கூறுவதை வைத்து பார்க்கும்பொழுது டெல்லியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை களம் என தெரிகிறது

Tags:    

Similar News