ஆதிவாசி குழந்தைகளை தந்தெடுத்து படிக்க வைக்கிறார் மலையாள நடிகர் மோகன்லால்.
'விஷ்வ சாந்தி' என்ற அறக்கட்டளை மூலமாக கேரளாவில் தொடர்ந்து தன்னார்வ சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் மோகன்லால், இந்த அறக்கட்டளையின் மூலம் பழங்குடியினர் பகுதியில் 20 பிள்ளைகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார் மோகன்லால். அந்த திட்டத்திற்கு 'வின்டேஜ்' என பெயர் வைத்திருக்கிறார் இந்தத் திட்டம் அட்டப்பாடியில் இருந்து தொடங்கப்பட்டது, கிராமங்களிலிருந்து 20 ஆதிவாசி பழங்குடியினர் குழந்தைகளை தத்தெடுத்து அவருக்கு கல்வி சேவையை வழங்கி வருகிறார் மோகன்லால்.
இந்தத் திட்டத்தில் 20 ஆதிவாசி பிள்ளைகளின் 15 ஆண்டு படிப்பு மற்றும் அது தொடர்பான அனைத்து செலவுகளையும் மோகன்லால் ஏற்றுக் கொண்டுள்ளார், மேலும் இதுபோன்ற குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்க தயாராக இருப்பதாகவும் மோகன்லால் தெரிவித்துள்ளார்.