'இளையராஜாவின் தீவிர ரசிகன் நான்' - உருகிய விஜய்சேதுபதி

Update: 2022-04-18 10:00 GMT

'நான் இளையராஜாவின் தீவிர ரசிகன், அவரது இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன' என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.




இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'மாமனிதன்' இந்த படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் புதுச்சேரியில் நடந்தது.




இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது, "யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜாவுடன் ஒரே படத்தில் பணியாற்றும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்திருக்காது. நான் இளையராஜாவின் தீவிர ரசிகன் அவருடைய இசையில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. இயக்குனர் சீனு ராமசாமி மனிதாபிமானத்தை மையப்படுத்தி படம் எடுக்க கூடியவர் இப்படத்தில் ஒரு பகுதியாக நான் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன், அனைவருக்கும் நன்றி" என கூறினார்.

Tags:    

Similar News