தெலுங்கில் பாடகராக புது அவதாரம் எடுத்த சிம்பு

Update: 2022-04-18 10:15 GMT

இயக்குனர் லிங்குசாமிக்காக தெலுங்கில் பாடகராக புது அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சிம்பு.




இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'தி வாரியர்'. ராம் பொத்தினேனி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆதி, நாசர் ஆகியோர் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.




வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரும் 'தி வாரியர்' திரைப்படத்தில் தற்போது நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் சிம்பு அந்த பாடலை பாடியுள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவில் இந்த பாடல் பதிவிடப்பட்டது.

Tags:    

Similar News