தனுஷுடன் இணைந்த சம்யுக்தா மேனன்

Update: 2022-04-20 10:15 GMT

'வாத்தி'படத்திற்காக நடிகர் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் தற்பொழுது படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.






சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் 'நானே வருவேன்' படப்பிடிப்பை முடித்த தனுஷ் அடுத்தபடியாக இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படப்பிடிப்பு தற்பொழுது ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.





இந்த நிலையில் படத்தின் நாயகியாக பிரபல நடிகை சம்யுக்தா மேனன் இணைந்துள்ளார். இதன் புகைப்படங்களும் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Tags:    

Similar News