'கே.ஜி.எப்' நிறுவனத்திற்கு படம் இயக்கப் போகும் சுதா கொங்கரா

Update: 2022-04-22 07:45 GMT

'கே.ஜி.எப்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் பிலிம்ஸ் அடுத்தபடியாக இயக்குனர் சுதா கொங்கராவை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.



'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா, இவர் அடுத்தபடியாக 'சூரரைப்போற்று' படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் வெளியாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'கே.ஜி.எஃப் 2' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பெல் பிலிம்ஸ் நிறுவனம் சுதாவின் அடுத்த படத்தை தயாரிப்பதாக அறிவித்துள்ளது.





இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 'எங்களின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் நங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். எங்களின் எல்லா படங்களையும் போன்று இந்த படத்தின் கதையும் இந்திய அளவில் இருக்கும் என நம்புகிறோம்' என தெரிவித்துள்ளனர். 'கே.ஜி.எஃப்' போலவே இந்த படமும் பான்-இந்தியா படமாக இருக்கும் எனவும் தெரிகிறது.

Tags:    

Similar News