ரசிகர்களை ஈர்த்த 'காத்துவாக்குல இரண்டு காதல்' படத்தின் ட்ரைலர்

Update: 2022-04-23 11:00 GMT

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் வெளியான 'காத்துவாக்குல இரண்டு காதல்' ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.





இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் 'ரவுடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'காத்துவாக்குல இரண்டு காதல்'. இந்த படத்தின் டிரைலர் நேற்று இரவு 7 மணியளவில் வெளியானது இளைஞர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான சிறிது நேரத்திலேயே இணையங்களில் பேசுபொருளாக மாறியது.

 




அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்த காரணத்தினால் இந்த படத்தின் டிரைலரை மிகவும் எதிர்பார்த்து இருந்தனர் ரசிகர்கள். இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 28'ம் தேதி 'காத்துவாக்குல இரண்டு காதல்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News