'இந்திய சினிமா கொடியை உயரப் பறக்க வைத்த 'கே.ஜி.எஃப்' - புகழ்ந்து தள்ளிய அல்லு அர்ஜுன்

Update: 2022-04-24 10:15 GMT

'கே.ஜி.எப் 2' பட குழுவினரையும், படத்தின் நாயகன் யஷ் நடிப்பையும் அதிகமாக பாராட்டிப் புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.




இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் எஸ், சஞ்சய் தத், ஸ்ரீனிதி ஷெட்டி, ரவீனா தாண்டன் நடிப்பில் 'கே.ஜி.எஃப்' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான 'கே.ஜி.எப் 2' இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இதுவரையில் 800 கோடி ரூபாய் அளவு வசூல் செய்துள்ள 'கே.ஜி.எஃப் 2' படம் இன்னும் அதிகமான வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என கணிக்கப்பட்டுள்ளது.





இந்த நிலையில் 'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினரை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''கே.ஜி.எஃப் 2' குழுவினருக்கு வாழ்த்துக்கள், யஷ் வெறித்தனமான நடிப்பு மற்றும் உழைப்பு மூலம் ரசிகர்களை காந்தம் போல இருக்கிறார். சஞ்சய் தத் ஜீ, ரவீனா தாண்டன் மற்றும் சீனிதி ஷெட்டி ஆகியோர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் அவர்களுக்கு எனது மரியாதை, ஒரு சிறப்பான சினிமா அனுபவத்திற்காக இந்திய சினிமா கூடிய உயரப் பறக்க வைத்ததற்கு அனைவருக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.

Tags:    

Similar News