ஓட்டு போட்ட பின் தளபதி விஜய் செய்த முதல் வேலை! என்ன தெரியுமா?

Update: 2021-04-08 05:23 GMT

தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் பொதுமக்களும், அரசியல்வாதி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை முறையாக ஆற்றினர்.அந்தவகையில் தளபதி விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தார் என்பதும், அவர் சைக்கிளில் சென்று வாக்கு அளித்ததற்கு நெட்டிசன்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.













அதன் பின்னர் விஜய் தரப்பில் இருந்து விஜய் சைக்கிளில் ஏன் சென்று வாக்களித்தார் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் நேற்று தனது ஜனநாயக கடமையை ஆற்றிய தளபதி விஜய், நேற்றிரவே 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் விஜய் இருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பதால் அவர் ஜார்ஜியா சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தளபதி 65 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதன் பின்னர் தற்போது ஜார்ஜியாவுக்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டதாகவும் இதனை அடுத்து தளபதி 65 படக்குழுவினர் ஜார்ஜியா சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News