ஜம்மு - காஷ்மீர் மாநிலம் நீரு கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார் நடிகர் அக்ஷ்ய் குமார்.
பாலிவுட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகருமான அக்ஷ்ய் குமார் சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பாந்திப்பூரா மாவட்டத்திலுள்ள நீரு என்கிற பகுதிக்கு தனி ஹெலிகாப்டரில் சென்றார்.
அந்த பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் வாலிபால் மற்றும் நடனம் ஆடவும் செய்தார்.
பின்னர் அந்த நீரு கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார். இந்த செயலை தற்பொழுது பலரும் புகழ்ந்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் நடிகர் அக்ஷ்ய் குமாரை நன்றியுடன் பார்க்கின்றனர்.