திரைத்துறையில் 10 ஆண்டுகள் - நெகிழ்ந்த சிவகார்த்திகேயன்

Update: 2022-02-03 12:00 GMT

திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.




 


சின்னத்திரையில் தொகுப்பாளராக தன் வாழ்வைத் தொடங்கி இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 10 ஆண்டுகள் முடிவடைகின்றது. இந்நிலையில் இந்த பத்து ஆண்டுகள் முடிவடைந்ததை குறிப்பிட்டு ரசிகர்களுக்கும் திரைத்துறையினர் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் கடிதம் எழுதியுள்ளார்.




 


அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "எனக்கு முதல் பட வாய்ப்பளத்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும், என்னுடன் நின்ற அனைத்து சினிமா கலைஞர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என கடிதம் எழுதியுள்ளார்.

Similar News