தென்னிந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூலை விரைவாக கடந்து சாதனை படைத்துள்ளது.
தென்னிந்தியாவில் வெளியான ஒரு படம் இந்தியில் வெளியாகி வசூல் சாதனை புரிவது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை, அந்த வகையில் இயக்குனர் ராஜமவுலி இயக்கி வெற்ற வெற்றி பெற்ற ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகி ஐந்து நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது ஹிந்தி மொழியில்.
தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இன்னும் சில தினங்களில் 150 கோடி வசூலிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பாலிவுட் படம் எந்த ஒரு படமும் இந்த அளவுக்கு பெரிய தொகையை வசூலிக்க வில்லை என்பது கூடுதல் தகவல்.