வலிமை படத்தின் நீளம் கட் - 12 நிமிட காட்சிகளை வெட்ட படக்குழு முடிவு

Update: 2022-02-26 14:15 GMT

வலிமை படத்தின் நீளம் காரணமாக 12 நிமிட அளவிலான காட்சிகள் குறைக்கப்பட உள்ளன.




 


இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளிவந்த படம் 'வலிமை', மூன்று தினங்களுக்கு முன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் படத்தின் நீளம் அதிகமாக உள்ளது என பொதுவான கருத்து நிலவியது. குறிப்பாக படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் அளவில் உள்ளது பாடல்களோ படத்தில் அதிகமாக கிடையாது, இரண்டே பாடல்கள்தான் காமெடி காட்சிகளும் படத்தில் இல்லை, இதுவே படத்திற்கு ஒரு குறையாக தோன்றுவதாக படக்குழு நினைத்தது.




 


இதனை கருத்தில் கொண்டு 12 நிமிடம் அளவிலான காட்சிகளை ஆங்காங்கே குறைக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. நாளை முதல் திரையரங்குகளில் 12 நிமிடம் குறைக்கப்பட்ட காட்சிகளுடன் 'வலிமை' வெளியாகும்.

Similar News