ஏப்ரல் 13 அன்று ஐந்து மொழிகளில் வெளியாகிறது 'பீஸ்ட்' - ரசிகர்கள் கொண்டாட்டம்
வரும் ஏப்ரல் 13'ம் தேதி அன்று விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்த படம் 'பீஸ்ட்' அனிருத் இசையமைத்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது, கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த வருடமே வெளியாக வேண்டிய 'பீஸ்ட்' சற்று தள்ளி போனது. இதுவரை 'பீஸ்ட்' படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே வெளிவந்தன இரண்டும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 13'ஆம் தேதியன்று 'பீஸ்ட்' திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் 'பீஸ்ட்' படத்தின் போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டது.