அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் படம் 'வலிமை', காவல் துறை அதிகாரியாக அஜித்குமார் நடிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்றுதான் வெளியாகியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை அப்டேட் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த வலிமை படத்தின் வெளியீட்டு தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13'ம் தேதி திரையரங்குகளில் 'வலிமை' திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மேலும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.