"ஒரு ஹீரோ கிடைச்சுட்டா சூட்டிங் போயிடலாம்னு கிளம்பி வந்துடுறாங்க" - நெல்சனை வறுத்தெடுத்த இயக்குனர் எஸ்.ஏ.சி

Update: 2022-04-19 06:45 GMT

'ஒரு ஹீரோ கிடைச்சுட்டா சூட்டிங் போயிடலாம்னு இப்பொழுது உள்ள இயக்குனர்கள் ஒன் லைனில் கதை சொல்லி ஹீரோவிடம் ஓ.கே வாங்கி வந்து விடுகிறார்கள்' என 'பீஸ்ட்' திரைப்படம் குறித்து நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.




இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'பீஸ்ட்', பல கலவையான விமர்சனங்களை பெற்ற 'பீஸ்ட்' திரைப்படம் தற்பொழுது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 'அரபிக் குத்துப்பாட்டு வரை பீஸ்ட் படம் எனக்கு பிடித்திருந்தது, இது விஜய் அவர்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படமாக உள்ளது. தற்போது உள்ள இளம் இயக்குனர்கள் முதல் இரண்டு படங்களை கடின உழைப்பைக் கொடுத்து எடுத்துவிடுகிறார்கள் அதன் பிறகு பெரிய ஹீரோ கிடைத்தவுடன் நாம் எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்துவிடலாம் என்ற நிலைக்கு வந்துவிடுகிறார்கள் சர்வதேச அளவில் ஒரு கனமான விஷயத்தை படத்தில் சொன்ன வரும்பொழுது அதற்காக இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும்" எனக் கூறினார்.



மேலும் அவர் கூறியதாவது, "ஒரு ஹீரோ கிடைத்துவிட்டது சூட்டிங் போய்விடலாம் என நினைத்து இப்படிப்பட்ட கதையெல்லாம் படமாக்க முடியாது, இப்பொழுது உள்ள இயக்குனர்கள் கதையை ஒன்லைனில் சொல்லி ஹீரோவிடம் ஓ.கே வாங்கி விடுகிறார்கள் ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு விடுகின்றனர் பீஸ்ட் படத்தில் நான் பார்த்தது ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார், ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் இருக்கிறார், ஒரு டான்ஸ் மாஸ்டர் இருக்கிறார், ஒரு எடிட்டர் இருக்கிறார், ஒரு ஹீரோ இருக்கிறார் ஆனால் இயக்குனர் மட்டும் இல்லை" என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.



Source - Asianet News

Similar News