ரஜினி 169 கதாநாயகி இவரா?

Update: 2022-02-15 12:45 GMT

எந்திரன் படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாகிறார் ஐஸ்வர்யா ராய்.




'அண்ணாத்த' படத்திற்கு அடுத்தபடியாக சன் பிக்சர்ஸ் ரஜினியின் 169 வது படத்தை அறிவித்துள்ளது, இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது.




இந்நிலையில் படத்தின் நாயகி யார் என்ற சஸ்பென்ஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' பட நாயகி ஐஸ்வர்யாராய் மீண்டும் இப்படத்தில் இணையப் போகிறார் என தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News