ஜவ்வு மாதிரி இழுக்கும் சங்கர் லைகா பஞ்சாயத்து! இந்தியன்-2 படம் வருமா? வராதா? தண்ணி தெளித்துவிட்ட கமல்!

Update: 2021-04-28 10:30 GMT

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் 'இந்தியன் 2' திரைப்படம் உருவாகி வருகிறது.

படம் எடுத்து முடிக்கப்படுவதற்குள் ஷங்கர் தெலுங்கிலும், இந்தியிலும் இரு படங்கள் எடுக்க கமிட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. எங்களுக்கு 'இந்தியன் 2' எடுத்து கொடுத்த பிறகு, அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என்பதில் லைகா நிறுவனம் உறுதியாக நிற்கிறது.

இதனை தொடர்ந்து "இந்தியன் 2 " படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்குவதற்கு இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த திரைப்படத்துக்கு ரூ. 150 கோடி பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், ரூ.236 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது வரைக்கும் 80 சதவீதப் பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்து தர வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும்.

இயக்குநர் ஷங்கருக்கு ரூ. 40 கோடி சம்பளம் பேசிய நிலையில் இதுவரை ரூ. 14 கோடி கொடுத்துள்ளோம். எஞ்சிய ரூ. 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம் எனக் கூறி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சுமூகமாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென கூறியது. ஷங்கர் தரப்பு அக்டோபர் மாதத்திற்குள் எடுத்து தருவதாக கூறுகிறது. லைகா தரப்பினர் ஜூன் மாதத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்கின்றனர். 

இவ்வளோ களோபரம் நடந்தும் கமல் எதையும் கண்டும் காணாமல், தன்னுடைய அடுத்தகட்ட வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். 

Similar News