மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார்.
ஆதி, நிக்கி கல்ராணி நடிக்க இயக்குனர் சரவன் இயக்கத்தில் 2017'ம் ஆண்டு வெளியான படம் 'மரகத நாணயம்', ஃபேன்டசி நகைச்சுவை படமான இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படத்திற்கு பின் எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இயக்குனர் சரவன், அடுத்ததாக அதர்வா நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், அதர்வா படத்துக்கு பின் மரகத நாணயம் படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக இயக்குனர் சரவன் தெரிவித்துள்ளார். மரகத நாணயம் 2 படத்திற்கான கதைக்கருவை தயாரிப்பாளர் டில்லி பாபுவிடம் கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு பற்றியும் விரைவில் தகவல்கள் வெளியிட வாய்ப்புள்ளது.