ஓய்வு பெற்ற நீதிபதி இந்தியன் 2 படத்தின் பஞ்சாயத்தை தீர்த்து வைப்பார் - நீதிமன்றம் தீர்ப்பு !

Update: 2021-10-29 09:45 GMT

ஷங்கர் லைகா நிறுவனத்திற்கிடையிலான பிரச்சினையை ஓய்வு பெற்ற நீதிபதி பேசி தீர்த்து வைப்பார் என நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.




 


கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு நின்று போனது. ஷங்கர் ராம்சரண் படத்தையும், கமல் லோகேஷ் கனகராஜ் படத்தையும் தொடர்ந்தனர்.




 


இந்நிலையில் லைக்கா நிறுவமம் படத்தை இயக்க ஷங்கரை அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்தியன்-2 வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஷங்கர்-லைகா நிறுவனத்திற்கிடையிலான பிரச்சினையை மீண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி பேசி தீர்த்து வைப்பார் என்று அந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர். இதனால் மீண்டும் படத்திற்கான பஞ்சாயத்து ஒய்வு பெற்ற நீதிபதியிடம் செல்கிறது.

Similar News