'ஜென்டில்மேன் 2'வில் பிரபல இசையமைப்பாளர் - கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு

Update: 2022-01-24 00:30 GMT

கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கும் 'ஜென்டில்மேன் 2' திரைப்படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கவுள்ளார்.




 


28 ஆண்டுகளுக்கு முன் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கரின் முதல் படமாக ஜென்டில்மேன் வெளிவந்தது. அர்ஜுன் நடித்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்களுக்கு சிவப்புக்கம்பளம் விரித்தது. பின்னர் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தற்பொழுது வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.




 


இந்நிலையில் 'ஜென்டில்மேன் 2' படத்தை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கவுள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனை தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.

Similar News