கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய விதித்த இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கைதி', 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளியான இப்படத்தின் கதை என்னுடையது என கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் கைது படத்தை பிறமொழிகளில் மறுபதிப்பு செய்யவும், 2'ம் பாகம் எடுக்கவும் தடை கோரி இருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஏற்கனவே பிறப்பித்த இடைக்காலத் தடையை ரத்து செய்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் 'கைதி 2' படத்தை எடுப்பதற்கு விதித்த தடை விலகியுள்ளது.