இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கே.ஜி.எப்-2 படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த படம் கே.ஜி.எப், இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இந்த படம் சற்று தள்ளி இந்த ஆண்டு வெளியாகிறது.
வரும் ஏப்ரல் 14'ஆம் தேதி வெளியாகவிருக்கும் கே.ஜி.எப்-2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது, கே.ஜி.எஃப்-2 படத்தின் ஒரு பாடலின் லிரிகல் விடியோ வரும் மார்ச் 21'ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் கே.ஜி.எப் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.