வசூலில் 'பீஸ்ட்' படத்தை தட்டி தூக்கிய 'கே.ஜி.எப் 2'

Update: 2022-04-15 06:30 GMT

தமிழ் வருடப்பிறப்புக்கு வெளியான படங்களில் வசூல் சாதனையில் 'பீஸ்ட்' படத்தை முந்தி உள்ளது 'கே.ஜி.எப் 2'




தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தென்னிந்தியாவில் இருபெரும் படங்கள் வெளியாகின, ஏப்ரல் 13'ஆம் தேதி வெளியான 'பீஸ்ட்' மற்றும் ஏப்ரல் 14'ஆம் தேதி வெளியான 'கே.ஜி.எப் 2' இந்த இரு படங்களும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. காரணம் விஜய் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணி, 'கே.ஜி.எப்' படத்தின் முதல் பாகத்தின் பெரும் வெற்றி. இந்த நிலையில் எந்த படம் அதிகம் வசூலிக்கும்? எந்த படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெறும்? என எதிர்பார்த்து வந்த நிலையில் 'பீஸ்ட்' படத்தைவிட 'கே.ஜி.எஃப் 2' படம் அதிகமான வசூலை வாரி குவித்துள்ளது.




 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் 13ஆம் தேதி வெளியான 'பீஸ்ட்' படம் 2 நாட்களில் 100 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது, தமிழகத்தில் 60 கோடியையும், தெலுங்கு மாநிலங்களில் 10 கோடியும், கர்நாடகாவில் மற்றும் கேரளாவில் சேர்த்து 18 கோடியும், வட இந்தியாவில் இரண்டு கோடியும் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதே நிலையில் யஷ் நடித்த 'கே.ஜி.எஃப் 2' படம் நேற்று ஒரே நாளில் 150 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. ஹிந்தி பதிப்பில் மட்டும் 38 கோடி ரூபாயை வசூலித்த 'கே.ஜி.எஃப் 2' படம் தென்னிந்திய மொழிகளில் 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது, இது மட்டுமில்லாமல் அயல்நாடுகளில் 30 கோடி ரூபாய் வசூலித்து ஒரே நாளில் 150 கோடியில் வாரி குவித்துள்ளது 'கே.ஜி.எஃப் 2' இரண்டு நாட்களில் 'பீஸ்ட்' வசூலித்த 100 கோடியை விட ஒரே நாளில் 'கே.ஜி.எப் 2' வசூலித்த 150 கோடி சாதனை பெரிது. 

Tags:    

Similar News