இரவில் சாப்பிடாமல் தூக்கம், 25 கிலோ உடல் எடை குறைப்பு - சிம்புவின் சீக்ரெட் !
மாநாடு படத்திற்காக 25 கிலோ எடை குறைத்து கஷ்டப்பட்டதக நடிகர் சிம்பு கூறியுள்ளார்.
மாநாடு படம் வெற்றியடைந்து திரையரங்குகளில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் 'தினமலர்' இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "மக்களுக்கு எளிதாக புரியும், டைம் லுாப் கதை கொண்ட ஒரு கமர்சியல் படம் மாநாடு. சாதாரண பையனா வரும் ஹீரோவுக்கு தன்னை சுற்றி நடப்பது புரியாது. ஒரு மாநாட்டில் சில பிரச்னை நடக்குது. ஹீரோ வில்லனை சுத்த விடுகிறார் என கதை நகர்கிறது. மாநாடு படத்திற்காக 25 கிலோ குறைத்தேன், இரவு சாப்பிடாமல் பசியில் துாங்க வேண்டும். அது கஷ்டம் ஆனால் பயிற்சி எடுத்தால் நல்லது. நடை, உடற்பயிற்சி, டென்னிஸ்க்கு நேரம் ஒதுக்கி செய்தேன்" என்றார்.
மேலும், "கொரோனா காலத்தில் நிறைய கதைகள் ரெடி பண்ணிட்டேன். கண்டிப்பா இயக்குவேன்" என கூறியுள்ளார்.