ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 3வது முறையாக இணையும் தனுஷ்

Update: 2022-01-28 16:00 GMT

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.





ராஞ்சனா படத்தில் மூலம் தனுசை இந்தி திரையுலகிற்கு அழைத்துச் சென்றவர் இயக்குனர் ஆனந்த் எல்.ராய். இவர் தற்பொழுது 'அந்தாங்கி ரே' என்ற படத்தில் தனுசை இயக்கினார். இந்நிலையில் மூன்றாவது முறையாகவும் தனுஷை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். ஏற்கனவே தனுஷ் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம் மற்றும் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.





படத்தின் தலைப்பு மற்றும் பிற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Similar News