மார்ச் 3-ஆம் தேதி தனது ரசிகர்களுக்காக ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
தமிழ் திரையுலகில் பரபரப்பான இசையமைப்பாளராகவும், இளைஞர்கள் மத்தியில் பிரபல இசை அமைப்பாளராகவும் விளங்கும் யுவன் சங்கர் ராஜா அவ்வப்போது ஆல்பங்களும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் மார்ச் 3-ஆம் தேதி "ஒரு அருமையான பாடல் கேட்க தயாராக இருங்கள்" என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் யுவன் சங்கர் ராஜா பாடகி துவணி பானு ஷாலி'யுடன் இணைந்து பாடியுள்ளார். இது ஆல்பம் போல் இருக்குமா அல்லது திரைப்படத்தின் பாடலா என்பது மார்ச் 3'ம் தேதி அன்றே தெரிய வரும்.