மேட்ரிக்ஸ் 4'ம் பாகத்தில் பிரியங்கா சோப்ரா !

Update: 2021-11-26 09:45 GMT

தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்ஷன்ஸ் படத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.




 


5 ஆண்டுகளுக்கு முன்பு குவாண்டிகோ என்ற தொலைக்காட்சி தொடருக்காக ஹாலிவுட்டில் சென்று நடிக்க துவங்கிய பிரியங்கா சோப்ரா பின்னர் பே வாட்ச் திரைப்படம், நிகழ்ச்சி தொகுப்பு என அங்கு வலம் வருகிறார்.




 


இந்நிலையில் 1999'ம் ஆண்டு வக்காவ்ஸ்கி இயக்கத்தில் வெளியான படம் தி மேட்ரிக்ஸ். கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இரண்டு பாகங்கள் அடுத்தடுத்து வெளிவந்தது. தற்போது இதன் 4ம் பாகம் தி மேட்ரிக்ஸ்: ரிசர்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். மேலும் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்துள்ளனர்.

Similar News