'வலிமை' படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள 'தல 61' படத்தையும், தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர், நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'நேர்கொண்ட பார்வை' தயாரித்தார். அதனைதொடந்து இயக்குனர் ஹெச்.வினோத், அஜித் குமார் கூட்டணியில் மீண்டும் 'வலிமை' படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றாம் முறையாக அஜித்துடன் கூட்டணி சேர இருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். இதனை ஹிந்தியில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.