'தளபதி 66' இசையமைப்பாளர் இவரா? உற்சாகத்தில் ரசிகர்கள் !

Update: 2021-09-29 12:45 GMT

விஜய் நடிக்க உள்ள 'தளபதி 66' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இசையமைப்பாளர் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.




 


நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடி பல்லி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர், விஜய்யுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை. மிகப்பெரிய பட்ஜெட் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை ரசிகர்களுக்கு புதிராகவே இருந்தது.




 


தற்பொழுது தயாரிப்பாளர் தரப்பு 'தளபதி 66' படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக வாய்ப்புகள் அதிகம்.

Similar News