விஜய் 66 படத்தை கைப்பற்ற போகும் பெரும் நிறுவனம் !

Update: 2021-11-26 09:30 GMT

'விஜய் 66' படத்தை உரிமையை வாங்க இப்பொழுதே பெரும் நிறுவனங்கள் பல போட்டி போடுகின்றன.




 


விஜய் தனது 66 படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. விஜய் தவிர்த்து மற்ற நடிகர், நடிகையர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்ப்பார்ப்பை இப்பொழுதே எகிற செய்துள்ளது இப்படம்.




 


இந்நிலையில் இந்த படத்தின் டிஜிட்டல், சேட்டிலைட் உரிமையை வாங்க ஜீ நெட்வொர்க் என்ற நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல கோடிக்கு இதன் பேரம் நடப்பதாகவும் மேலும் பல நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Similar News