இணையத்தை கலக்கும் 'விஜய் 66' படபூஜை புகைப்படங்கள்

Update: 2022-04-06 11:45 GMT

விஜயின் 66'வது படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டுள்ளது.




நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 65'வது படமாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்தபடியாக தயாரிப்பாளர் 'தில்' ராஜூ தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படம் விஜய்யின் 66'வது படமாகும் தற்காலிகமாக விஜய் 66 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.




இந்த பூஜையில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, நடிகர் விஜய், சரத்குமார், படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா, விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதள முழுவதும் வைரலாகி வலம் வருகின்றன. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இப்படத்தின் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News