'விஜய் 66'ல் விஜய்க்கு அண்ணனாக மோகன்

Update: 2022-04-21 08:15 GMT

எண்பதுகளில் வெற்றி நடிகராக வலம் வந்த மோகன் தற்போது விஜய்யின் 66 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.




பீஸ்ட் படத்தை முடித்த கையுடன் அடுத்தபடியாக இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. அதில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின, சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் 66 படத்தில் நடித்து வருகிறார்.



அதனைத்தொடர்ந்து எண்பதுகளின் வெற்றி கதாநாயகனான மோகன் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதைத் தவிர 'ஹரா' என்ற படத்தில் தற்போது மோகன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

Tags:    

Similar News