கொரோனோ-வால் நிறுத்தப்பட்ட டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாஸிபிள் 7' படப்பிடிப்பு.!
படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளதால், டாம் க்ரூஸின் 'மிஷன் இம்பாஸிபிள் 7' படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
ஹாலிவுட்டில் முன்னணி நடிகர் டாம் குரூஸ்'ன் வெற்றிகரமாக சீரிஸ் 'மிஷன் இம்பாஸிபிள்' இதற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் தற்போது 'மிஷன் இம்பாசிபிள்' படத்தின் 7ம் பாகத்தில் நடிக்கிறார். இதன் தயாரிப்பாளரும் அவர்தான். இப்படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளதால், 'மிஷன் இம்பாஸிபிள் 7' படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஜூன் 14-ந் தேதி வரை படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.