7'வது முறையாக இணையும் சுசீந்திரன், டி.இமான் கூட்டணி.
இப்பொழுததெல்லாம் இசையமைப்பாளர், இயக்குனர்கள் கூட்டணி அவ்வளவாக நீடிப்பதில்லை. ஓன்னு அல்லது இரண்டு படங்கள் வேலை செய்துவிட்டு பின் பிரிந்துவிடுகிறார்கள். இந்நிலையில் தொடர்ச்சியாக 7'வது படத்திலும் இயக்குனர் சுசீந்திரனும், இசையமைப்பாளர் டி.இமானும் இணையவிருக்கிறார்கள்.
இயக்குனர் சுசீந்திரனின் படமாகிய பாண்டிய நாடு படத்தில் இணைந்த டி.இமான்-சுசீந்திரன் கூட்டணி பின் ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், கென்னடி கிளப் என தொடர்ந்தது. இந்நிலையில் 7'வதாக பெயரிடப்படாத படம் ஒன்றிற்கும் டி.இமான் இசையமைப்பார் என அறிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.